சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு தினம்: வாக்களிப்பு நிலையத்தில் பிரதமர் லீ..!

GE2020: PM Lee visit Polling station (Photo: PAP)

சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு தினம் என்பதால் பிரதமர் லீ சியென் லூங், டெக் கீ (Teck Ghee) சமூக நிலையத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு காலை சென்றதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு. லீ அவர்கள், அங் மோ கியோ குழுத்தொகுதியில் 5 உறுப்பினர்கள் கொண்ட அணியை வழிநடத்துகிறார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு..!

இந்நிலையில் பிரதமர் லீ தனது அணி வேட்பாளர்களுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு பேருந்தில் சென்றதாகவும் செய்தி குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்கினை அளிக்கலாம்.

கூடுதலாக வாக்களிப்பு நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களைத் தவிர்க்க வாக்காளர்களுக்குக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையுறை அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது போன்றவை வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் கடைபிடிக்க வேண்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும், தேர்தல் அதிகாரிகள் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டிய போது மட்டுமே அவற்றைக் நீக்க அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

37.5 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வாக்களிக்கும் நேரத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே போல், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவுகளில் இருப்பவர்களும் அதே நேரத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg