GE2020: சிங்கப்பூரில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாளை வாக்களிப்பு தினம்..!

GE2020: Singapore all set for Polling Day with additional safety measures
GE2020: Singapore all set for Polling Day with additional safety measures (Photo: TODAY)

சிங்கப்பூரில் நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வாக்களிப்பு தினத்திற்கு, நாடு முழுவதும் சுமார் 1,100 இடங்கள் வாக்களிப்பு நிலையங்களாக தயாராகி வருகின்றன.

நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்கினை அளிக்கலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை..!

சுமார் 2.65 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக வாக்களிப்பு நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களைத் தவிர்க்க வாக்காளர்களுக்குக் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையுறை அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது போன்றவை வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் கடைபிடிக்க வேண்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும், தேர்தல் அதிகாரிகள் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டிய போது மட்டுமே அவற்றைக் நீக்க அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

37.5 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வாக்களிக்கும் நேரத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே போல், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவுகளில் இருப்பவர்களும் அதே நேரத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமான பேனாக்களுக்குப் பதிலாக, இந்த முறை தானாகவே முத்திரையிடும் பேனாக்கள், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர்கள் தங்களுடைய சொந்தப் பேனாக்களையும் கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளது என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

வாக்கெடுப்பு முடிந்ததும், துப்புரவாளர்கள் வாக்குச் சாவடிகளை முழுமையாக கிருமி நீக்கம் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg