சிங்கப்பூரில் நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை..!

Maid jailed for throwing dog from balcony
Maid jailed for throwing dog from balcony (Photo: NParks)

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு 4 வாரங்கள் சிறைத்தண்டனை (ஜூலை 8) விதிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தோனேசியாவை சேர்ந்த ஜியாந்தி வுலந்தரி (வயது 28) என்ற பணிப்பெண், 11 வயதான நாயைக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க : துவாஸ் அருகே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது சடலம் ஒன்று மீட்பு..!

ஜியாந்தி, அந்த நாயின் உரிமையாளரிடம் கடந்த 2019 டிசம்பர் முதல் பணிபுரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு வீட்டு வேலைகள் மற்றும் இரண்டு குழந்தைகள், அதனுடன் சேர்த்து இரண்டு பறவைகள் மற்றும் இரண்டு நாய்கள் ஆகியவற்றை பராமரிக்கும் பணியும் இருந்துள்ளது.

கடந்த மே 13ஆம் தேதி காலை 9 மணியளவில், ஜியாந்தி தனது முதலாளியின் வீட்டின் மூன்றாவது மாடி படுக்கையறைக்கு பறவைக்கு உணவளிப்பதற்கும் அதன் கூண்டை சுத்தம் செய்வதற்கும் சென்றுள்ளார்.

அச்சமயம் நாய் அந்த அறையில் இருந்துள்ளது, மேலும் அது தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்ததால், கோபமடைந்த அவர் அதை மூன்றாவது தளத்தில் இருந்து கீழே வீசினார்.

கீழே வீசப்பட்ட நாய், புல்தரையில் விழுந்த காரணத்தால் காயங்கள் ஏற்பட்டன. நாயின் உரிமையாளர் தேசியப் பூங்காக் கழகத்திடம் புகார் அளித்தார்.

நாய்க்கு தேவையற்ற வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியதற்காகவும், அதை கீழே வீசியதற்காகவும், அவருக்கு 18 மாதங்கள் வரை சிறை, S$15,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg