கொரோனா வைரஸ் (COVID-19): வேலையிடத்தில் முதலாளிகள் என்ன செய்யவேண்டும்?

கொரோனா வைரஸ் (COVID-19): வேலையிடத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டால் அல்லது கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் முதலாளிகள் என்ன செய்யவேண்டும் என்று சிங்கப்பூர் அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

வைரஸ் தொற்று ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டால்?

  • நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணவும்
  • வைரஸ் கிருமித்தொற்று குறித்த பரிசோதனை முடிவுகள் பற்றி மற்ற ஊழியர்களிடம் தெரிவிக்கவும்
  • ஊழியர்கள் தங்கள் சுகாதாரத்தைக் கண்காணிக்கவும்
  • நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவும்
  • உடல் நலமில்லையெனில் உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும்
  • வீட்டிலேயே இருக்க வழிவகை செய்யவும்

வைரஸ் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால்?

  • தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளோடு ஒத்துழைக்கவும்
  • பாதிக்கப்பட்ட ஊழியர் வேலைசெய்த பகுதியிலிருந்து அனைவரையும் வெளியேற்றி, அப்பகுதிக்குத் தடுப்புகள் போடவும்
  • பாதிக்கப்பட்ட நபருடன் நீண்ட நேரம் நெருங்கிய தொடர்பு எவருக்கும் இல்லையெனில், அந்தத் தளத்திலிருந்து / கட்டடத்திலிருந்து அனைவரையும் வெளியேற்றத் தேவை இல்லை
  • இடத்தை முழுமையாகத் துப்புரவு செய்து, கிருமி நீக்கும் பணிகளை மேற்கொள்ளவும்

கூடுதல் விவரம் அறிய : go.gov.sg/covid19-workplace