சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 128 பேர் கைது..!

Geylang 128 hauled up SPF
(PHOTO: SPF)

சிங்கப்பூர் காவல் படை (SPF) தலைமையிலான சோதனை நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான 128 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கெய்லாங்கில் பிடிபட்டனர்.

குற்றவியல் புலனாய்வுத் துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் சுங்க மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகிய பல அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மால் மற்றும் உணவகங்களுக்கு தொற்று பாதித்த நபர்கள் சென்றுவந்தனர்..!

89 ஆடவர்கள் மற்றும் 39 பெண்கள் கைது

இந்த ஆண்டு செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை நடத்தப்பட்ட பல அமைப்பு அமலாக்க நடவடிக்கையில், 17 முதல் 73 வயதுக்குட்பட்ட மொத்தம் 89 ஆடவர்கள் மற்றும் 39 பெண்கள், பல்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டதாக SPF தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மருந்துகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களின் 9 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

(Photo: SPF)
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள்

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்காக, 17 மற்றும் 71 வயதுக்குட்பட்ட 19 ஆடவர்கள் மற்றும் ஏழு பெண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பொது பொழுதுபோக்கு உரிம நிபந்தனைகளை மீறுதல்

பொது பொழுதுபோக்கு உரிம நிபந்தனைகளை மீறுதல், மதுபான உரிம நிபந்தனைகளை மீறுதல் மற்றும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறுதல் போன்ற பல குற்றங்களுக்காக 52 ஆடவர்கள் மற்றும் 32 பெண்களை இந்த அமைப்பு விசாரித்தது.

(Photo: SPF)

இதில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் சிராங்கூன் ரோட்டில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் – 5 பேர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…