1 கிலோ வெறும் S$2 மட்டுமே – மூன்றாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டமாக சலுகை !

1kg fries

ஜூலை 2019 இல் திறக்கப்பட்ட உள்ளூர் உணவு மற்றும் குளிர்பான பிராண்டான Shake Shake in a Tub அதன் மூன்றாவது ஆண்டு நிறைவைக் அடைகிறது. அதன் ஒரு பகுதியாக 1 கிலோ ஃப்ரைஸ்களை S$2க்கு சலுகை அளித்துள்ளது.

ஜூலை 29, 2022 அன்று ஒரு நாள் மட்டும் இதுபோன்ற 100 டப்களை வழங்குவதாக Shake Shake in a Tub அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் 111 சோமர்செட்டில் உள்ள Shake Shake in a Tub விற்பனை நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.

மேலும் அன்றைய தினத்தில் சில புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்திள்ளது.

100 கிலோ ஃப்ரைஸ்களை மொத்த வருவாயான S$200க்கு Shake Shake in a Tub விற்றுள்ளது. இந்த ஷூஸ்ட்ரிங் ஃப்ரைஸ்கள் வழக்கமாக regular-sized portion S$3.20க்கும், Super Giant portion S$10.80க்கும் விற்பனையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.