“மற்றவர்களை வாழ வைப்பது நம் ரத்தத்தில் ஊறியது” – சிங்கப்பூரில் தன் சொந்த முயற்சியில் இயலாதோருக்கு உதவி வரும் தமிழ் சிறுமி!

girl help needy singapore
Stomp

சிங்கப்பூரில் தன் சொந்த முயற்சியில் பொருட்கள், காலணிகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கி வருகிறார் 11 வயது தமிழ் சிறுமி.

CHIJ Our Lady of Good Counselல் படிக்கும் அக்சரா விஸ்வநாதன் தனது எட்டு வயதிலிருந்தே சமூக மற்றும் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சிங்கப்பூரின் பிரம்மாண்ட TOTO டிரா: S$19.4 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்ற 8 வெற்றி டிக்கெட்டுகள்!

அவரது தாயார் சித்ரா இது பற்றி கூறுகையில்; அக்சரா இரக்க குணம் கொண்ட கருணையுள்ள பெண் என்றார்.

ஜோகூரில் உள்ள குழந்தைகள் இல்லங்களுக்கு அக்சராவை அழைத்து வருவோம் என்றும், அங்கு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் எழுதுபொருட்களை வழங்குவதாகவும் சித்ரா கூறினார்.

அதோடு மட்டும் நிறுத்திவிடாமல், விலங்குகள் தங்குமிடங்களுக்கும் அவர்கள் நிறைய தன்னார்வப் பணிகளை நன்கொடையாக செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

விலங்குகள் பாதிக்கப்பட்டால் அதை அக்சரா தாங்கிக்கொள்ள மாட்டார் என்று சித்ரா குறிப்பிட்டார்.

சொந்தமாக சேலை விற்று ஈட்டிய S$100 லாபத்தை, இரண்டு ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வாங்கித் தன் அப்பாவின் உதவியோடு வழங்கினார் சிறுமி அக்சரா.

மேலும், வேண்டாம் என்று ஒதுக்கப்படும் நல்ல காலணிகளை சேகரித்து அதையும் உதவி செய்ய திட்டமிட்டுள்ளார் இந்த நல்லுள்ளம் கொண்ட சிறுமி.

சிங்கப்பூர் Work permit அனுமதியில் பலே திட்டம்… ஆடவருக்கு சிறை – ஒருவர் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தர தடை!