திடீரென உடைந்து நொறுங்கிய SBS பேருந்தின் கண்ணாடி கதவு…

Glass door of bus suddenly shatters, SBS Transit investigating
Glass door of bus suddenly shatters, SBS Transit investigating (Photo: Stomp)

பெடோக் ரிசர்வாயர் (Bedok Reservoir) சாலையில் நிறுத்தப்பட்ட பேருந்தின் கண்ணாடி கதவு திடீரென உடைந்து சிதறியது.

கடந்த மே 10 அன்று மாலை 5 மணியளவில், எஸ்.பி.எஸ் டிரான்ஸிட் பேருந்தில் இந்த சம்பவம் நடந்ததாக பேருந்தில் இருந்தவர் கூறியதாக ஸ்டாம்ப் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் “முக்கிய பங்காளி” சிங்கப்பூர் – ஆக்ஸிஜன் தொடர்பான உதவிகளுக்கு நன்றி கூறிய இந்துஸ்தான் டைம்ஸ்!

ஸ்டாம்ப் கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி.எஸ் டிரான்சிட்டின் தகவல்தொடர்புகளின் மூத்த துணைத் தலைவர் திருமதி டம்மி டான்: “பஸ் போக்குவரத்து சிங்னலில் காத்திருந்தபோது கண்ணாடி திடீரென உடைந்தது” என்றார்.

எந்தவொரு பயணிகளும் இதில் காயமடையவில்லை என்றும், ஏனெனில் யாரும் வெளிப்படையான வலி வேதனையில் இருந்ததாக தெரியவில்லை அல்லது யாரும் உதவிக்கு அணுகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்த சம்பவத்தால் காயமடைந்த பயணிகள், 1800-2872727 என்ற ஹாட்லைன் எண் மூலமாகவோ அல்லது crc@sbstransit.com.sg என்ற மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

மேலும், இந்த சம்பவத்தின் காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் 30க்கும் மேற்பட்ட பொது இடங்களுக்கு COVID-19 பாதிக்கப்பட்டோர் சென்றனர்