இந்தியாவின் “முக்கிய பங்காளி” சிங்கப்பூர் – ஆக்ஸிஜன் தொடர்பான உதவிகளுக்கு நன்றி கூறிய இந்துஸ்தான் டைம்ஸ்!

Hindustan Times thanks Singapore
(photo via Vivian Balakrishnan Facebook)

இந்தியாவில் ஏற்பட்ட கோவிட் -19 பாதிப்பின் 2ஆம் அலைக்கு மத்தியில், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர் ஒரு “முக்கியமான பங்காளி” என்று இந்திய ஊடகமான இந்துஸ்தான் டைம்ஸ் நன்றி தெரிவித்துள்ளது.

ஆக்ஸிஜன் தொடர்பான மருத்துவ பொருட்களுக்கான தளவாட மையமாக செயல்பட்டதில் சிங்கப்பூர் முக்கியமான பங்காளி என்று அது கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 30க்கும் மேற்பட்ட பொது இடங்களுக்கு COVID-19 பாதிக்கப்பட்டோர் சென்றனர்

கடந்த ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து தொடங்கி, சிங்கப்பூர் இந்தியாவுக்கு வழங்கிய உதவி பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் இந்த செய்தி வெளியிட்டது.

மொத்தம் 8,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 51,000 ஆக்ஸிமீட்டர்கள், 900க்கும் மேற்பட்ட BiPAP இயந்திரங்கள் மற்றும் 27 வென்டிலேட்டர்கள் இந்தியாவுக்கு சிங்கப்பூர் வழங்கியதாக அது கூறியுள்ளது.

கடந்த மே 11 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனுப்பிய முதலாவதான நாடுகளில் சிங்கப்பூரும் உள்ளது என்று கூறினார்.

இந்த கடினமான நேரத்தில் சிங்கப்பூர் இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும், மேலும் முடிந்த பகுதிகளுக்கு உதவ பல்வேறு வழிகளை ஆராய்வோம் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட தவறிய 70 பேர் மீது விசாரணை