சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட தவறிய 70 பேர் மீது விசாரணை

COVID-19 breaching measures investigate

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட தவறிய 70 பேர் மீது விசாரணை நடந்துவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே 7ஆம் தேதி, கிரீன்வுட் அவென்யூ வீட்டில் சிலர் ஒன்றுகூடியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

கட்டுப்பாடுகள் கடுமை: டாக்சிகள், தனியார் வாடகைக் கார்களுக்கு கட்டுப்பாடுகள்

அங்கு 19 ஆண்களும் 10 பெண்களும் ஒன்றாக கூடி, மது அருந்திக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேலும், 23 வயது ஆடவர் ஒருவர் பொது ஊழியரிடம் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் என்று நம்பப்படும் பொருட்களை வைத்திருந்ததற்காக 40 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

(Photo: Singapore Police Force)

அதே போல, கடந்த 7ஆம் தேதி, காக்கி புக்கிட் சாலையில் உள்ள தொழிற்கூடத்தில் 15 பேர் ஒன்றுகூடியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

மேலும், கடந்த மே 14 அன்று, ஜலான் புக்கிட் மேரா அலுவலக பிரிவில் கூடியிருந்த கூட்டம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு 19 ஆண்களும் 7 பெண்களும் ஒன்றாக கூடி இருந்துள்ளனர்.

அனைவரின் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரில் 2 புதிய COVID-19 தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம்