நூதன முறையில் தங்கம் கடத்தல்…. விமான நிலையத்தில் சிக்கிய பயணி!

Singapore passengers-trichy-airport

 

திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து நூதன முறையில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 11.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான பல திட்டங்கள்

சந்தேகத்தின் அடிப்படையில், பயணி ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அந்த நபரின் பெட்டியை சோதனை செய்தனர். அந்த பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த திருக்காணி அனைத்தும் தங்கத்தினால் செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது.

அதன்படி, 11.16 லட்சம் மதிப்பிலான 186 கிராம் திருகாணி வடிவிலான தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அத்துடன், தங்கத்தைக் கடத்தி வந்த நபரிடம் விமான நிலையக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் இருந்த சக பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப்பெருக்கையொட்டி, சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் தாலிப்பெருக்கு பூஜை!

தங்கம் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணித்தும், சோதனையிட்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.