சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான பல திட்டங்கள்

migrant-domestic-workers mental-distress
(Photo: TRT World and Agencies)

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களின் மனநலனை பாதுகாக்க மனிதவள அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அது தொடர்பாக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் தங்கிய சிங்கப்பூர் PR… தகுதியை இழந்த விவரம்

இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விகள்:

பணிப்பெண்கள் சந்திக்கும் மனநோய் அறிகுறிகளை முதலாளிகள் கண்டறிய அமைச்சகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன?

முதலாளி மற்றும் பணிப்பெண் இடையே புரிந்துணர்வை வளர்க்க MOM என்ன நடவடிக்கைளை மேற்கொள்கிறது.

அதேபோல, மனநோய் அறிகுறியுள்ள பணிப்பெண்களுக்கு செய்யப்படும் உதவி குறித்தும் கேள்வி எழுந்தது.

அதற்கான பதில்கள்:

முதலாளிகளுக்கான Employer’s Orientation Programme என்னும் அறிமுகப் பயிற்சி அவசியமாக இருப்பதை அமைச்சர் டான் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.

“முதலாளிகள், பணிப்பெண்களுடன் பொறுமையாக செயல்பட வேண்டும் என்பதை அது விளக்கி நினைவுபடுத்தும்.”

அதே போல பணிப்பெண்களுக்கான அமைப்புகளுடன் MOM நெருங்கி பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேபோல முதல்முறையாக பணிப்பெண்ணாக வேலைசெய்யும் பெண்களிடம் முதல் 6 மாதத்திலேயே நேர்காணல் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கப்பலில் இருந்து விழுந்த இந்திய பெண் உயிரிழப்பு – CCTV காட்சிகளை வைத்து உறுதி