சாக்லேட் டப்பாவில் மறைத்து தங்கம் கடத்தல்…. விமான நிலையத்தில் சிக்கிய பயணி!

சாக்லேட் டப்பாவில் மறைத்து தங்கம் கடத்தல்.... விமான நிலையத்தில் சிக்கிய பயணி!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம், பாம்புகள், கஞ்சா போதைப்பொருட்கள் உள்ளிட்டவைக் கடத்தி வருவது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கான அதிரடி ஆஃபரை அறிவித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

அந்த வகையில், மலேசியாவில் இருந்து தங்கத்தை பயணி ஒருவர் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 29- ஆம் தேதி அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் மூலம் வந்த பயணிகளையும், உடைமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணியை தனியே அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அவர் கொண்டு வந்திருந்த சாக்லேட் டப்பாவில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து, 149 கிராம் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி பின்னர், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 8.89 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற இளைஞர் கைது!

அத்துடன், சாக்லேட் டப்பாவில் இருந்து தங்கத்தை எடுக்கும் வீடியோவையும் சுங்கத்துறை அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.