தங்க நகைகள், பணத்தைத் திருடிய இந்தோனேசிய பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை!

முதலாளியிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தைத் திருடிய பணிப்பெண்ணுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் புகழ்பெற்ற “Mr and Mrs Mohgan’s” கடையின் உரிமையாளர் “சோமசுந்தரம் மோகன்” காலமானார்

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்தவர் வினா குரோதுனைனி (Vina Qurotunaini). இவருக்கு வயது 27. இவர் பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் வந்தார். அதைத் தொடர்ந்து, 40 வயதுடைய சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், வினாவை கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிளமெண்டியில் (Clementi) உள்ள தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். அங்கு வினா இல்ல பணிப்பெண்ணாக பணிப்புரிந்து வந்தார். அவரது பணியானது வீட்டு வேலைகளைச் செய்தல் மற்றும் தனது முதலாளியின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது ஆகியவை அடங்கும்.

தொடர்ந்து பணியாற்றி வந்த வினா, கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது முதலாளியின் படுக்கையறையில் சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, டிராயரில் சாவி ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். பின்னர், டிராயரை உடனடியாக திறந்துப் பார்த்த வினா, அதில் 2,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், தங்க நகைகள் இருந்துள்ளனர். அவற்றைத் திருட முடிவு செய்து, நகை மற்றும் பணம் முழுவதையும் டிராயரில் இருந்து திருடியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 8,000 சிங்கப்பூர் டாலர் ஆகும்.

துவாஸில் பிடிபட்ட வாகனத்தில் 1,000- க்கும் மேற்பட்ட வரிச் செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் பறிமுதல்- ஒருவர் கைது!

பின்னர் திருடிய தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை தனது முதலாளியின் வீட்டில் உள்ள சர்வீஸ் யார்டில் துணிகளில் சுற்றி மறைத்து வைத்துள்ளார். இதில் பெரும்பாலான தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை தனது கடனை அடைக்கவும், நண்பர்களுக்கு விருந்து வைக்கவும், புதிய நகைகளை வாங்கவும் செலவிட்டுள்ளார். அதேபோல், மீதமிருந்த பணத்தை இந்தோனேசியாவில் உள்ள தனது வீட்டிற்கும் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், தனது அறையில் இருந்த டிராயரைத் திறந்து பார்த்த முதலாளி, தங்க நகைகள், ரொக்கம் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார். அதைத் தொடர்ந்து, இந்தாண்டு ஜனவரி மாதம் 22- ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தார். அதில், தனது வீட்டின் அறையில் இருந்த விலையுயர்ந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கம் காணவில்லை. எனது வீட்டில் பணிப்புரியும் வினா என்பவரது மேல் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத தொடர்ந்து, பணிப்பெண் வினா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் மீது முதலாளியின் வீட்டில் நகைகள் மற்றும் பணத்தைத் திருடியது உள்ளிட்டக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

சிங்கப்பூரில் இன்று முதல் வந்துள்ள அதிரடி மாற்றங்கள்; அனைத்தும் ஒரே பதிவில் – வாங்க பார்ப்போம்!

அந்த வகையில், நேற்று (14/03/2022) இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் வில்பிரட் டென்னிஸ் பிலோமின் (State Prosecuting Officer (SPO) Wilfred Dennis Philomin), 180 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள தங்க நகைகள் குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்டது. மற்ற தங்க நகைகள் அடகுக் கடைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும், பணத்தை மீட்க முடியவில்லை என்று வாதிட்டார்.

அப்போது பணிப்பெண் வினா, தன் மீது சுமத்தப்பட்டுள்ளக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதைப் பதிவு செய்துக் கொண்ட நீதிமன்ற நீதிபதி, பணிப்பெண் வினாவிற்கு சுமார் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.