துவாஸில் பிடிபட்ட வாகனத்தில் 1,000- க்கும் மேற்பட்ட வரிச் செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகள் பறிமுதல்- ஒருவர் கைது!

Photo: Singapore Customs

சிங்கப்பூர் சுங்கத்துறை (Singapore Customes) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்ச் 12- ஆம் தேதி அன்று அதிகாலை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, துவாஸ் சவுத் வாக் (Tuas South Walk) அருகே மலேசிய பதிவெண் கொண்ட வாகனமும், அதன் பின்னால் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கனரக வாகனம் ஒன்றும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனங்களைக் கண்ட சுங்கத்துறை அதிகாரிகள், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கனரக வாகனத்தை சோதனை செய்தனர்; அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,020 சிகரெட்டு பெட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவை முறையாக வரி செலுத்தப்படவில்லை. இது தொடர்பாக, வாகனத்தின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மலேசியாவைச் சேர்ந்தவர் ஆவர். அவருக்கு வயது 29.

சிங்கப்பூரில் இன்று முதல் வந்துள்ள அதிரடி மாற்றங்கள்; அனைத்தும் ஒரே பதிவில் – வாங்க பார்ப்போம்!

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் மற்றும் இரண்டு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மொத்த கடமை (Total Duty) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods And Services Tax- ‘GST’) ஏய்ப்பு செய்தப்பட்டத் தொகை முறையே சுமார் 87,100 சிங்கப்பூர் டாலர் மற்றும் 6,930 சிங்கப்பூர் டாலர் ஆகும். அந்த நபருக்கு எதிரான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

வாங்குதல் (Buying), விற்பனை செய்தல் (Selling), அனுப்புதல் (Conveying), வழங்குதல் (Delivering), சேமித்து வைத்திருத்தல் அல்லது கையாளுதல் ஆகியவை வரி செலுத்தப்படாதப் பொருட்கள் சுங்கச் சட்டம் மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களாகும்.

வேலைத் தேடுபவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ள மனிதவள அமைச்சகத்தின் அறிவிப்பு!

குற்றவாளிகளுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டத் தொகையில் இருந்து சுமார் 40 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும் (அல்லது) ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.