அந்தரத்தில் உடைந்த கான்கிரீட் சுவர்… தொங்கு ஏணியில் சிக்கி தவித்த இரு ஊழியர்கள் – திக் திக் வீடியோ

gondola tips over 2 workers taken to hospital
Shin Min Daily News video

சிங்கப்பூர்: அந்தரத்தில் தொங்கு ஏணி திடீரென உடைந்ததால் அதில் வேலை செய்து கொண்டிருந்த இரு ஊழியர்கள் சிக்கி தவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (மே 11) காலை பூன் லே டிரைவ் HDB பிளாட்டில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேலிருந்து கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததை அடுத்து, அதில் பொருத்தப்பட்டு இருந்த தொங்கு ஏணி உடைந்து விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

திருச்சி to சிங்கப்பூர்.. விமானத்தில் கோளாறு – என்ன நடந்தது ?

இதனை அடுத்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு (SCDF) காலை 8:10 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

SCDF வருவதற்கு முன்பு, இரண்டு ஊழியர்களில் ஒருவரை 14-வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல்கள் வழியாக பொதுமக்களில் ஒருவர் பாதுகாப்பாக அழைத்து வந்தார்.

மற்றொரு ஊழியரை 15வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல்கள் வழியாக SCDF வீரர்கள் மீட்டு அழைத்து வந்தனர்.

பின்னர் ஊழியர்கள் இருவரும் இங் டெங் போங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Video: https://www.facebook.com/watch/?v=776559180534976