வழி தவறி காணாமல் போன 96 வயது மூதாட்டி… சிங்கப்பூரில் அலைந்து திரிந்து அவரை குடும்பத்துடன் சேர்த்த வெளிநாட்டு ஊழியர் – கைமாறு செய்ய தேடிவரும் குடும்பம்!

good-samaritan-send-missing-grandma-home
Candy Kwek/Facebook

சமீபத்தில் காணாமல் போன 96 வயது மூதாட்டியை வீட்டில் சேர்த்த நல்லுள்ளத்தை அவரின் குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

லோ சியோங் கோ என்ற அந்த மூதாட்டி, கடந்த மே 5 அன்று காலை சுமார் 9:30 மணியளவில் தெம்பனீஸில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறினார்.

ஏறக்குறைய நூறு வயதை எட்டிய இந்த மூதாட்டி, வெளியில் சென்று அட்டை அட்டைப்பெட்டிகளை தன் தள்ளுவண்டியுடன் எடுத்துக்கொண்டு மாலையில் வீடு திரும்புவார். இது அவரின் வாடிக்கையாக இருந்து வந்தது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழக ஊழியரின் குடும்பத்தில் முகமூடி கும்பல் அட்டகாசம்; தீரன் பட பாணியில் தாக்கி நகை, கார் கொள்ளை!

இந்த நிலையில், நீண்ட நேரம் ஆகியும் லோ வீட்டிற்குத் திரும்பவில்லை, ​​​​இதனை அடுத்து என்ன நடந்தது என்று தெரியாமல் பதறியது அந்த குடும்பம்.

அதே நாளில் இரவு 9:10 மணிக்கு ஃபேஸ்புக் பதிவில்; அவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தர வேண்டியும் பொதுமக்களிடம் லோவின் பேத்தி கோரிக்கை வைத்தார்.

அவரின் அந்த பேஸ்புக் பதிவு அனைவராலும் பரவலாகப் பகிரப்பட்டது, ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மரைன் பரேடில் அதிகாலை 2 மணிக்கு லோ காணப்பட்டார் என்றும், மே 6 அன்று அதிகாலை 5 மணியளவில் கெயிலாங் செராயில் கடைசியாகக் காணப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூதாட்டி வீட்டை விட்டு வெளியேறி 24 மணி நேரத்திற்கும் மேலாக கடந்துவிட்ட நிலையில் அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற ஊழியரை, விமான நிலையத்தில் வைத்து தூக்கிய போலீஸ்!

இறுதியில், பிற்பகல் 2:30 மணியளவில் லோ அதிர்ஷ்டவசமாக வீடு திரும்பினார்.

அவர் வழி தவறி சென்று, உதவி கேட்க அல்ஜூனிடில் உள்ள ஒரு கார் ஷோரூமுக்குள் சென்றுள்ளார். ஷோரூமில் பணிபுரியும் ஒருவரிடம் தான் தொலைந்துவிட்டதாக கூறியுள்ளார், பின்னர் அந்த ஊழியர் அவரை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க முடிவு செய்தார் என்று அவரது பேரக்குழந்தை கூறியுள்ளார்.

பிரைம் சூப்பர் மார்க்கெட்டின் அருகில் தான் தங்கியிருந்ததாக மட்டும் மூதாட்டி அந்த ஊழியரிடம் கூறியுள்ளார்.

அதை ஒரு அடையாளமாகப் பயன்படுத்திய அந்த நல்ல உள்ளம் கொண்ட ஊழியர், சரியான சூப்பர் மார்க்கெட்டை கண்டறிய அல்ஜூனிட் மற்றும் தெம்பனீஸை சுற்றி அலைந்தார்.

கடைசியில், லோ பத்திரமாக வீடு திரும்பிய மகிழ்ச்சியை எங்களால் அடக்க முடியவில்லை என்று லோவின் பேரக்குழந்தை கூறியுள்ளார்.

லோ பத்திரமாக வீடு திரும்பிய பரபரப்புக்கும், வாக்குமூலங்களை பெற வந்த காவல்துறைக்கும் இடையில், லோவின் குடும்ப உறுப்பினர்கள் அந்த நல்ல மனிதரிடம் சென்று சரியாக நன்றி தெரிவிக்கவோ அல்லது அவரது தொடர்பு விவரங்களைக் வாங்கவோ முடியவில்லை, என்றனர்.

அவர், 6968 கார் நம்பர் ப்ளேட்டுடன் மெர்சிடிஸ் காரை ஓட்டிச் சென்ற சீன ஆடவர் என்பது மட்டுமே அவர்களுக்கு நினைவில் இருந்தது.

தங்கள் பாட்டியை பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்த அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும், அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதகவும் மூதாட்டியின் குடும்பம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.