சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழக ஊழியரின் குடும்பத்தில் முகமூடி கும்பல் அட்டகாசம்; தீரன் பட பாணியில் தாக்கி நகை, கார் கொள்ளை!

Masked gang robbery singapore tamil worker home
DNA

சிங்கப்பூரில் வேலை பார்த்து வருபவர் சரவணன், இவர் பெரம்பலூர் பகுதி அம்மாபாளையம் பிரதான சாலையை சேர்ந்தவர்.

இவரது மனைவி ரம்யா பெரம்பலூர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரகதி என்ற 9 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில், ரம்யா தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் தங்கி வருகிறார். கடந்த மே 7ஆம் தேதி இரவு வழக்கம் போல உள் தாழ்ப்பாள் போட்டுகொண்டு ரம்யா தனது குடும்பத்துடன் உறங்க சென்றார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற ஊழியரை, விமான நிலையத்தில் வைத்து தூக்கிய போலீஸ்!

ரம்யாவின் தந்தை பாண்டியன் வீட்டுக்குள்ளே ஒரு அறையில் தூங்கியுள்ளார். ரம்யா, அவரின் பிள்ளை பிரகதி மற்றும் அம்மா ஆகியோர் மொட்டை மாடிக்கு தூங்க சென்றுள்ளனர்.

இந்நிலையில், அன்று நள்ளிரவு 2.30 மணிக்கு அந்த வீட்டின் உள்தாழ்ப்பாளை உடைத்து கொண்டு, முகமூடி கையில் கையுறை அணிந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டுக்குள் புகுந்தனர்.

அறையில் தூங்கிக்கொண்டிருந்த பாண்டியனை அந்த கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர், இதில் வலி தாங்கமுடியாமல் பாண்டியன் சத்தம் போட அவரின் மகள் ரம்யா கீழே ஓடிவந்துள்ளார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், ரம்யாவிடம் இருந்து 3 பவுன் தாலி சங்கிலி, ¾ பவுன் 2 மோதிரங்களை பறித்து, வாசலில் நிற்கும் காரின் சாவியையும் மிரட்டி வாங்கினர்.

அனைத்தையும் எடுத்துக்கொண்டு, வீட்டை வெளி தாழ்ப்பாள் போட்டுவிட்டு, வெளியில் நின்ற பாண்டியனின் காரையும் எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பித்து சென்றது.

இதனை அடுத்து, ரம்யா போலீசாரிடம் உடனடியாக புகார் கொடுத்தார். பின்னர் விரைந்து வந்த போலீசார் அவர்களை காப்பாற்றி சம்பவம் குறித்து விசாரித்தனர்.

தற்போது அந்த கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மகளை கொடூரமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்திய தந்தைக்கு சிறை, 12 பிரம்படி – சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி