மகளை கொடூரமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்திய தந்தைக்கு சிறை, 12 பிரம்படி – சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி

Pic: File/Try Sutrisno Foo

தனது மகளை கொடூரமாகத் தாக்கி மரணம் ஏற்படுத்திய ஆடவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, தனது நான்கு வயது வளர்ப்பு மகள் தரையில் சிறுநீர் கழித்ததால், 29 வயதான அவர் சிறுமையை கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் – எச்சரிக்கை செய்யும் வானிலை சேவை நிலையம்

இந்நிலையில், தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 12 பிரம்படிகளும் இன்று திங்கள்கிழமை (மே 9) விதிக்கப்பட்டன.

சிறுமிக்கு மரணம் ஏற்படுத்திய கொலைக் குற்றச்சாட்டில் முஹம்மது சாலிஹின் இஸ்மாயில் என்ற அவர் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தார்.

வளர்ப்பு மகளை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதை அடுத்து மார்ச் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார் மற்றும் குறைந்த குற்றச்சாட்டில் அவர் தண்டனை பெற்றார்.

சாலிஹின் சிறுமியை வேண்டுமென்றே உதைத்த போதிலும், மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்று நீதிபதி கண்டறிந்தார்.

ஆனால், வேண்டுமென்ற கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியதாக குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. வேறு இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.

இதனை கருத்தில்கொண்டு அவருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கேளிக்கை விடுதிக்குள் நுழைய அனுமதி மறுப்பு; கடும் சண்டையில் ஈடுபட்ட போதையில் இருந்த ஆடவர்கள் – Viral Video