சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படலாம் – எச்சரிக்கை செய்யும் வானிலை சேவை நிலையம்

singapore weather met service

சிங்கப்பூரில் இந்த ஆண்டு பிற்பாதியில் புகை மூட்ட நிலை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வறண்ட காலநிலை நீடித்து, அது புகைமூட்டத்தை ஏற்படுத்தும் தீச் சம்பவங்களை ஏற்படுத்தினால் இந்த புகை மூட்ட நிலை ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனை சிங்கப்பூர் வானிலை சேவை நிலையம் கூறியுள்ளது.

கேளிக்கை விடுதிக்குள் நுழைய அனுமதி மறுப்பு; கடும் சண்டையில் ஈடுபட்ட போதையில் இருந்த ஆடவர்கள் – Viral Video

வருடம் தோறும் வறண்ட காலநிலையை தெற்கு ஆசியான் பகுதிகள் எதிர்கொள்ளும், அதாவது இது ஜூன் மற்றும் அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஏற்படும்.

அந்த நேரத்தில் மழை பொலிவு இயல்பான அளவில் இருக்கும். இருப்பினும், அப்போது வறண்ட பருவநிலை நீடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அது கூறியுள்ளது.

இதன் காரணமாக புகைமூட்டம் ஏற்படலாம் என சிங்கப்பூர் வானிலை சேவை நிலையம் எச்சரிக்கை செய்துள்ளது.

சிங்கப்பூரில் அதிகரித்த கோவிட்-19 தொற்று விகிதம்… மீண்டும் கட்டுப்பாடுகளோ என்ற அச்சத்தில் ஊழியர்கள்!