‘Grab’ நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி!

Photo: Grab Company, Singapore

தென்கிழக்கு ஆசியாவின் அதிக அளவில் டேக்சி சேவைகள் மற்றும் உணவு விநியோக சேவைகளை வழங்கி வரும் மிகப்பெரிய நிறுவனம் ‘Grab’. இந்த நிறுவனம் சிங்கப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள்…அதிர்ந்துப் போன அதிகாரிகள்!

அதன் தொடர்ச்சியாக, ‘Grab’ நிறுவனம் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக, ‘Grab’ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அந்தோணி டான் (Co-founder and CEO Anthony Tan) ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெமோவில், “Grab நிறுவனம், அதிக செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நிறுவனத்திற்கு புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். மூத்த மேலாளர்களுக்கான சம்பளம் முடக்கப்பட்டுள்ளது. பயண செலவுகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இதரப்படிகள் குறைக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மெமோ தகவலை அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ‘Grab’ நிறுவனம், கடந்த 2012- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 ஆண்டுகளாக சேவை வழங்கி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவின் எட்டு நாடுகளில் சேவையை வழங்கி வரும் ‘Grab’ நிறுவனம், கடந்த ஆண்டு நிலவரப்படி, சுமார் 8,800 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்! – சிங்கப்பூரில் கிடுகிடுவென ஏற்றம் காணும் வீட்டு வாடகை!

‘Grab’ நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையால் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.