பணப் பையை தொலைத்த ஓட்டுநர்: $300 வரை ரொக்கம், ஓட்டுநர் உரிமம் இருந்ததாக தகவல் – கண்டறிய உதவுங்கள்

File Photo : Singapore Police

கிராப் ஓட்டுநர் ஒருவர் வாகனம் ஓட்டும்போது தாம் பணப்பையை தொலைத்ததாக அதனை தேடி வருகிறார்.

தனது இந்த வேண்டுகோள் பதிவை அவர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார், பணப்பை கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி தொலைந்ததாக அவர் கூறியுள்ளார்.

வாகனத்தில் பயணிகள் இருக்கைகளை சரிசெய்யும்போது தற்செயலாக பை தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

உலக தரவரிசையில் 3ஆம் இடம்பிடித்து சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் சாதனை

பணப்பை கருப்பு நிறம் உடையது என்றும், மூன்று ஜிப்கள் அதில் இருப்பதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் $200 முதல் $300 வரை ரொக்கம், UOB டெபிட் வர்த்தக அட்டை, டாக்ஸி ஓட்டுநர் உரிமம் (TDVL), ஷெல் மற்றும் எஸ்ஸோ எரிபொருள் அட்டைகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் சென்ற இடங்களின் பட்டியலையும் பகிர்ந்துள்ளார், மேலும் அது கிடைத்தால் Facebook Messenger மூலம் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும் அல்லது ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆறு சக்கர லாரி மோதி சிங்கப்பூரர் பலி: “பைக் ஓட்ட வேண்டாம்” – பெற்றோர் போட்ட கட்டளையை மீறியவரின் சோக முடிவு