அட! இப்படியும் மோசடி கும்பல் செயல்படுமா… போலீசிடம் எப்படி தகவல் தெரிவிப்பது? – வாங்க தெரிஞ்சிப்போம்!

Sengkang NPC/FB

சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் ஒரு புதிய உக்தியை பின்பற்றுவதாக போலீஸ் எச்சரிக்கை செய்துள்ளது.

அந்த புதிய உக்தியின்கீழ் QR குறியீடுகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவதாக போலீஸ் கூறுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களை நிராகரிக்கிறதா சிங்கப்பூர்…?

QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் S$20 GrabFood வவுச்சரை பெறலாம் என்ற விளம்பர அட்டை சம்பந்தப்பட்ட மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு செங்காங் அக்கம்பக்க காவல் நிலையம் சிங்கப்பூரர்களை எச்சரித்தது.

“Don’t hangry, Be happy” என்ற வாசகத்துடன் அந்த விளம்பர அட்டை உண்மை போன்று பொதுமக்களை ஏமாற்றும் வண்ணம் தோன்றுவதாக கூறப்பட்டுள்ளது.

நீங்கள், அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது அது உங்கள் தனிப்பட்ட விவரங்களை கேட்கும்.

அந்த விளம்பர அட்டை Grab நிறுவனத்தால் உருவாக்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அது பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

புகார் அளியுங்கள்

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் ஏதேனும் உங்களுக்கு தோன்றினால், 6335 3533 என்ற எண் மூலம் சிங்பாஸ் உதவி மையத்திற்குத் தகவலை தெரிவிக்கலாம்.

அவசர போலீஸ் உதவிக்கு, 999ஐ அழைக்கவும்.

இதுபோன்ற குற்றங்கள் தொடர்பான தகவல் தெரிவிக்க, 1800-255-0000 என்ற காவல்துறையின் ஹாட்லைன் எண்னை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம்.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!