நடைபாதையில் சிறுமியை மோதிய சைக்கிள் – கண்ணாடி உடைந்து சிறுமிக்கு அறுவை சிகிச்சை…

GrabFood cyclist hit girl
(Photo: Google Maps)

புக்கிட் படோக் ஸ்ட்ரீட் 52இல் (Bukit Batok Street 52) உள்ள நடைபாதையில் சென்றுகொண்டிருந்த 8 வயது சிறுமி மீது சைக்கிளில் வந்த இளையர் ஒருவர் மோதினார்.

இதில் 18 வயதான அந்த GrabFood விநியோக ஓட்டுநர் கடந்த ஜனவரி 16ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த சில மால்கள்

கண்ணாடி உடைந்து காயம்

இந்த விபத்தில், அந்த சிறுமியின் கண்ணாடி உடைந்து, முகத்தில் இரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுமிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது என்றும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது என்றும் “தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுமியின் தாயார் சத்தியா கூறுகையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி புக்கிட் படோக் ஸ்ட்ரீட் 52-இல், தனது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது வழியில் வந்த அந்த சைக்கிள் வேகமாகச் செல்லவில்லை என்றாலும், தனது மகளையும், பின்னால் இருந்த மற்றொரு பெண்ணையும் தட்டிச் சென்றதாக சத்தியா கூறியுள்ளார்.

சைக்கிள் அவர்களைக் கடந்து சென்ற பிறகு, சத்தியா அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார். அப்போது தன் மகள், கண்ணாடி உடைந்து முகத்தில் ரத்தத்துடன் தரையில் கிடப்பதைக் கண்டார்.

மேலும், சைக்கிள் ஓட்டுநர் மன்னிப்புக் கேட்டார் என்றும், அவர்களிடம் அழுதார் என்றும் சத்தியா கூறினார்.

அறுவை சிகிச்சை

அதனை அடுத்து, சிறுமி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (NUH) அனுப்பப்பட்டார்.

அன்றைய தினம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த வாரம் சிறுமிக்கு மற்றொரு சுற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த கிராப்ஃபுட் ஓட்டுநர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேம்பாலத்தின் மீது டிரெய்லர் வாகனம் மோதி விபத்து – ஓட்டுநர் கைது