இரட்டை சிறுவர்கள் கொலை வழக்கு: தந்தைக்கு தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன ?

greenridge-crescent-playground-father-crime-scene
Lianhe Zaobao Facebook

இரட்டை சிறுவர்கள் கொலை வழக்கு: தனது 11 வயது மகனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 48 வயதான சிங்கப்பூர் ஆடவர் சேவியர் யாப் ஜங் ஹவுன் (Xavier Yap Jung Houn) மனநலம் தொடர்பான கண்காணிப்பிற்காகத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முதலில் யாப்பின் நீதிமன்ற விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜனவரி 31) காலை நடக்கும் என திட்டமிடப்பட்டது, ஆனால் இந்த வழக்கு விசாரணை சனிக்கிழமை (ஜனவரி 29) அன்றே விசாரிக்கப்பட்டது என்று மாநில நீதிமன்றங்களின் செய்தித் தொடர்பாளர் மதர்ஷிப் தளத்திடம் தெரிவித்தார்.

இரட்டை சிறுவர்கள் மரணம்: பல்வேறு மதத்தவர்களின் பிரார்த்தனை கூட்டம்

இரட்டையர் மரணம்: பலத்த பாதுகாப்புடன் தந்தையை சம்பவ இடத்திற்க்கு அழைத்து சென்ற போலீசார் – வீடியோ

CNA மற்றும் TODAY கூறியதாவது; மனநல கண்காணிப்பிற்காக அவர் சாங்கி சிறைச்சாலையின் மருத்துவ நிலையத்தில் மனநல கண்காணிப்பிற்காக வைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், அடுத்த மாதம் பிப். 18 அன்று யாப் நீதிமன்றத்திற்குத் திரும்புவார்.

முழு விவரம்: தன் சொந்த மகன்களையே கொலை செய்த தந்தை – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்

JUSTIN: அப்பர் புக்கிட் திமா விளையாட்டு மைதானத்தில் 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு