உஷார்..! சிங்கப்பூரில் இந்த குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது!

19 work pass holders, employers punished for flouting COVID-19 Leave of Absence requirements
19 work pass holders, employers punished for flouting COVID-19 Leave of Absence requirements (Photo: Ngau Kai Yan)

மொத்தம் 33 குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட சிங்கப்பூர் சட்டங்கள் வழிவகுக்கின்றன. கொலை, தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்கள் முக்கியமானவை.

கடந்த 2012ஆம் ஆண்டு கட்டாய மரணத் தண்டனை என்பதில் இருந்து சில குற்றங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

கடந்த 1970க்கு முன்பு வரை, சிங்கப்பூரில் மரண தண்டனைக்குரிய வழக்குகள் தனி நீதிபதி ஒருவரால்தான் விசாரிக்கப்படும்.

எனினும் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேர் கொண்ட நடுவர் மன்றம் ஒன்றும் வழக்கு விசாரணையை செவிமடுக்கும்.

அதன் முடிவில் விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட இருதரப்பு வாதங்களையும் தனி நீதிபதி தொகுத்தளிப்பார்.

அதன் அடிப்படையில் அந்த நடுவர் மன்றம் மரண தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுத்து தெரிவிக்கும். இதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி தீர்ப்பளிப்பார்.

எனினும் 1970க்குப் பிறகு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மரண தண்டனைக்குரிய வழக்குகளை விசாரிக்கும் வகையில் நடைமுறை மாற்றப்பட்டது.