திடீரென வரிசையாக வெடித்து பெயர்ந்த டைல்ஸ்.. HDB வீட்டில் அதிர்ச்சி – வீடியோ

திடீரென வரிசையாக வெடித்து பெயர்ந்த டைல்ஸ்.. HDB வீட்டில் அதிர்ச்சி - வீடியோ
Photo from Facebook

HDB குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் தரை டைல்ஸ் கற்கள் திடீரென வெடித்து பெயர்ந்த காட்சிகள் சற்று அச்சத்தை ஏற்படுத்தியது.

Teddy Ho என்ற ஆடவர் ஒருவர் டைல்ஸ் பெயர்ந்த காட்சிகள் அடங்கிய 2 காணொளியை Singapore Home DIY என்ற Facebook குழுவில் பகிர்ந்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களே சலுகையை பயன்படுத்துங்க.. இனி வெறும் S$15 செலுத்தி இந்த சேவையை பெறலாம்!

இந்த சம்பவம் கடந்த அக்.8 அன்று பிற்பகல் சுமார் 3:20 மணியளவில் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதனால் மிக அதிக சேதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் சில டைல்ஸ் கற்கள் விரிசல் அடைந்தன, சில கற்கள் பெயர்ந்து வந்தன, மேலும் சில கற்கள் முற்றிலும் உடைந்து சிதறின.

பதிவுக்கு கருத்து தெரிவித்த சிலர், HDB கழகத்திடம் இது குறித்து புகாரளிக்கச் சொன்னார்கள்.

பொதுவான இதுபோன்ற உடைப்புகளுக்கு பிளாட் உரிமையாளர்கள் தான் பொறுப்பு என்று 2021 ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி அமைச்சகம் (MND) எழுத்துப்பூர்வமாக கூறியது.

இருப்பினும், பிளாட் உரிமையாளர்களுக்கு 15 ஆண்டுகள் வரை HDB கழகம் டைல்களை சரிசெய்ய உதவும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Video: https://www.facebook.com/797335605/videos/1934217603646178/

கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு போர்க்கால வெடிகுண்டு.. கட்டுமான ஊழியர்கள் வெளியேற்றம்