சிங்கப்பூரில் சிகரெட் புகைப்பது தொடர்பான புகார்கள் அதிகரிப்பு..!

HDB received more reports about issues like cigarette smoke
HDB received more reports about issues like cigarette smoke

COVID-19 கட்டுப்படுத்த அதிரடி திட்டம் நடப்பில் இருந்த காலகட்டத்தில் சிகரெட் புகைப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து வீடமைப்பு வளர்ச்சி கழகம் (HDB) கூடுதல் புகார்களை பெற்றுள்ளது.

இதனை நேற்று புதன்கிழமை (நவம்பர் 4) நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி மூத்த அமைச்சர் சிம் ஆன் (Sim Ann) தெரிவித்தார்.

கொரோனா: வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி முதல் மார்ச் வரை, மாதத்திற்கு சுமார் 600 வழக்குகள் சமூக சீர்கேடுகள் தொடர்பான கருத்துக்களை HDB பெற்றுள்ளது.

இது ஏப்ரல் முதல் ஜூலை வரை, மாதத்திற்கு 2,100 வழக்குகளாக அதிகரித்துள்ளது என்று திருமதி சிம் கூறினார்.

அதிரடி நடவடிக்கைகள் காரணமாக அதிகமான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதும் படிப்பதும் இதற்குக் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.

ஆகஸ்ட் 2020 முதல், அந்த கருத்துக்களின் எண்ணிக்கை சுமார் 1,500ஆக குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஆண்டுக்கு சமூக சீர்கேடுகள் குறித்து சுமார் 3,400 புகார்கள் அரசு பெற்றுள்ளதாக கூறினார்.

சிங்கப்பூரில் 3ஆம் கட்டத் தளர்வு: ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கலாம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…