தொற்று காலத்தில் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு -மாணவர்களுடன் சுகாதார அமைச்சர் கலந்துரையாடினார்

health minister Ong Ye Kung laud to students and youths of singapore

சிங்கப்பூர் இளைஞர்களை சுகாதார அமைச்சர் வோங் பாராட்டியுள்ளார்.கோவிட்தொற்று பரவலின் போது இளைஞர்கள் பலரும் பல்வேறு அனுபவங்களை இழந்திருக்கலாம்.ஆனால் சமூகப் பொறுப்புணர்வு,மனவுறுதி போன்ற பண்புகளை பெற்றுள்ளனர் அமைச்சர் வோங் யி குங் பாராட்டியுள்ளார்.

தொற்றுபரவல் காரணமாக சிங்கப்பூரிலுள்ள இளைஞர்கள் சர்வதேச நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாமல் ,வேலையிடப் பயிற்சிகள் போன்றவை ரத்து செய்யப்பட்டன.கல்லூரி பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாமல் அவற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தனர்.விளையாட்டு வீரர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

மரினா பொலிவ்ர்டில் உள்ள NTUC நிலையத்தில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.கோவிட் தொற்று தாக்கம் குறித்து மாணவர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது.தொற்று நோயுடன் வாழ்வதில் உள்ள சவால்களும்,கவலைகளும் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

தொற்றுநோயின் பொதுதனிமைப்படுத்ப்பட்டவர்களுக்கு உணவு விநியோகிப்பது,தங்களுடைய இருப்பிடத்தை வெளிநாட்டு ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டது மற்றும் தொலைபேசி சேவை நிலையங்களில் பணியாற்றியது உட்பட தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவ மாணவர்கள் முன்னின்று எடுத்த முயற்சிகளை அவர் சுட்டிக் காட்டினார்.