சிங்கப்பூரில் புதிதாக நோய்த் தடுப்பு பராமரிப்பு திட்டம் தொடங்கப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு.!

Pic: MCI

நாட்டில் அதிகரிக்கும் சுகாதாரச் செலவுகளைச் சமாளிப்பதற்கும், நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைப்பதற்கும் நோய்த்தடுப்பு பராமரிப்பில் கவனம் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் திரு.ஓங் கூறியுள்ளார்.

வரும் 2030ம் ஆண்டுக்குள் சுகாதாரத்துக்கான செலவு மூன்று மடங்காகி சுமார் 60 பில்லியன் வெள்ளியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எனவே நாள்பட்ட நோய்க்கு ஆளாவதைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது பெரிய அளவில் உதவக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

நாள்பட்ட நோய்கள் அல்லது மோசமான நோய்கள் ஆகியவற்றுக்கு உள்ளாவதைத் தவிர்த்தால் நாம் ஆரோக்கியமாக முதுமையடைவோம் மற்றும் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்றும், இந்த ஆண்டு நோய்த் தடுப்புப் பராமரிப்பு சுகாதார அமைச்சகத்திற்கு முக்கிய அம்சமாக இருக்கும் என்றும், நோய்த் தடுப்பு பராமரிப்புத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் சுகாதார அமைச்சின் செலவினம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் தெரிவிக்கப்படும் என்றும் திரு. ஓங் கூறினார்.

மேலும், உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தை இந்த ஆண்டு திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா சூழலால் ஏற்பட்ட மனிதவளப் பற்றாக்குறையால் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன. இந்த வளாகம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் ஆகியோரை வேலைக்கு எடுப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசு சுகாதாரப் பராமரிப்புக்கு அதிக செலவு செய்வதாகவும், நமது மக்கள்தொகை அதிகரிப்பதால் இத்தகைய நடவடிக்கை எடுப்பது அவசியம் என திரு. ஓங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சம்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்பாரா நிகழ்வு அல்ல எனவும், சில நாட்களில் தொற்று சம்பங்களின் எண்ணிக்கை சுமார் 10,000ஆக பதிவானது. இது சமாளிக்ககூடியதே என்றும் அவர் கூறினார்.

ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ”….குறைவான நாடுகள் பங்கேற்பு – இந்திய போர் விமானம் “தேஜஸ்” இடம்பெறுமா?