சிங்கப்பூரில் 100,000 ஊழியர்களுக்கு S$4,000 பண அன்பளிப்பு – சுகாதார அமைச்சர்

(PHOTO: Lawrence Wong)

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தங்களை அர்பணித்துக்கொண்ட சுமார் 100,000 சுகாதார ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் S$4,000 பண அன்பளிப்பு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

அவசரகால மருத்துவமனைகளை நடத்தும் பொது சுகாதாரக் குழுக்களின் ஊழியர்கள், சமூக மருத்துவமனைகள், பாலிகிளினிக்குகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போன்ற பொது நிதியுதவி பெறும் சமூக பராமரிப்பு அமைப்புகள் இதில் அடங்குவர்.

சிங்கப்பூரில் வேலை என்றதும் மயங்கிய வாலிபர் – சுமார் 3.5 லட்சம் ரூபாய் பறிபோன சோகம்

ஊழியர்களின் மகத்தான பணிகளுக்கு அத்தகைய அன்பளிப்பு ஈடாகாது என்றாலும், இந்த சூழலில் அதனை செய்வது பொருத்தமானது என்று ஓங் கூறினார்.

கூடுதலாக, ஒவ்வொரு தகுதியான பொது சுகாதாரத் தயார்நிலை கிளினிக்கிற்கும் (PHPC) S$10,000 அன்பளிப்பை அமைச்சகம் வழங்கும்.

இந்த மாத தொடக்கத்தில், நவம்பர் 1ஆம் தேதி, சுகாதார ஊழியர்களுக்கான பண அன்பளிப்பை MOH தேவையானதாக பார்க்கிறது என்று ஓங் நாடாளுமன்றத்தில் கூறினார்.

தீ விபத்து: 40 குடியிருப்பாளர்கள் காவல்துறையினர் உதவியால் வெளியேற்றம்