சிங்கப்பூரில் வீட்டிற்கு வழி தெரியாமல் தவித்த முதியவருக்கு உதவி செய்த ஆடவர்.!

Help oldman find home
Pic: FB/Derick Khoo Yew Seng

சிங்கப்பூரில் தன் வீட்டிற்குச் செல்லும் பாதையை மறந்த முதியவருக்கு உதவி செய்த நபர் ஒருவரின் செயல் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

டேரிக் என்பவரின் தந்தை ஹாலண்ட் குளோஸில் (Holland close) உள்ள முடி திருத்தும் கடைக்கு சென்றுவிட்டு ரயில் ஒன்றில் ஏறினார். அப்போது திடீரென தமது வீட்டு முகவரியை மறந்த அந்த முதியவர் வழித்தெரியாமல் தவிர்த்தார்.

அப்போது, அந்த முதியவர் ரயிலில் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த நபர் ஒருவரிடம் உதவி கேட்டார். பின்னர் அந்த முதியவருக்கு தனது மகன் டேரிக்கின் தொலைபேசி எண் நினைவுக்கு வந்தது.

லிப்டில் ‘பி.எம்.டி.’யில் தீப்பிடித்து இளைஞர் உயிரிழப்பு!

அதன் பின்னர், ஆடவர் அவருடைய மொபைல் மூலம் டேரிக்கைத் தொடர்பு கொண்டு பேசினார். முதியவரின் வீட்டு முகவரியைத் தெரிந்துகொண்ட ஆடவர் Grab பகிர்வு சேவை மூலம் பயணத்திற்கான கட்டணத் தொகையையும் கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து, அந்த முதியவரின் மகனான டேரிக் கூ இயூ (Derick Khoo Yew) முகநூலில், முன் பின் அறிமுகம் இல்லை என்றாலும், என்னுடைய தந்தைக்கு உதவிய அந்த ஆடவருக்கு நன்றி எனக் கூறினார்.

மேலும், உதவி செய்த ஆடவருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டபோதிலும், அந்த நேரத்தில் செய்த மாபெரும் உதவி என டேரிக் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்த சிங்கப்பூர் போக்குவரத்துத்துறைக்கு அமைச்சர் வாழ்த்து!