பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை – தவிக்கும் சிங்கப்பூர் குடும்பங்கள்

migrant-domestic-workers mental-distress
(Photo: TRT World and Agencies)

பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க காத்திருக்கும் குடும்பங்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது இந்தோனேசிய நாட்டை சேர்ந்த பணிப்பெண்களை வேலைக்கு எடுத்தால் அவர்கள் வருகைக்காக சுமார் 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

“இந்திய ஊழியரின் Work pass அனுமதி புதுப்பிக்கவில்லை…” – பிஎப்ஐ-க்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டுக்கு சிங்கப்பூர் பதில்

ஏனெனில், அந்நாட்டில் எல்லை விதிமுறைகள் கடுமையான காரணத்தால் இந்த கால அவகாசம் எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிகமான குடும்பங்கள் இந்தோனேசிய பணிப்பெண்களை நம்பி உள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது.

ஏனென்றால் அவர்களின் தேவை என்பது இங்கு அதிகமாவே உள்ளது. அந்நாட்டில் விதிக்கப்படும் எல்லைக்கட்டுப்பாடுகள் காரணமாக பணிப்பெண்கள் அதிகமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும், பணிப்பெண்கள் நாட்டை விட்டு இங்கு வரும் முன்னர், அவர்களுக்கான தூதரக ஒப்பந்தத்தை நிறுவனங்கள் பெற வேண்டும் என்பதும் கட்டாயம்.

அதன் காரணமாக அதிக காலம் எடுப்பதாக வேலைக்கு எடுக்கும் ஏஜெண்டுகள் கூறுகின்றனர். இருப்பினும் எல்லா நிறுவனங்களுக்கும் இந்த பாதிப்பு இருக்காது என்பது கூடுதல் தகவல்.

பணிப்பெண்கள் தொடர்ந்து வருவார்கள் எனவும், அவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கட்டுமான ஊழியர் விளையாட்டாக செய்த செயல்… அவருக்கே வினையாய் அமைந்தது – S$3,500 அபராதம்