சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தி சிக்கிய வெளிநாட்டு ஆடவருக்கு மரண தண்டனை!

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தியதற்காக மலேசியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் சுமார் 900 கிராமுக்கு அதிகமான தூள் போதைப்பொருள் அடங்கிய பையை விநியோகிக்க மோட்டார் சைக்கிளில் சிங்கப்பூருக்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

சாங்கி கடற்கரையில் ஒன்றுகூடிய மக்கள்… கடல்வாழ் உயிரினங்களை தோண்டி எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்ற அறியாமை

கிஷோர் குமார் ரகுவான் கொண்டுவந்த பையில் இருந்த நான்கு மூட்டைகளில் 36.05 கிராம் ஹெராயின் இருந்ததாக பின்னர் கண்டறியப்பட்டது.

சிங்கப்பூர் சட்டத்தை பொறுத்தவரை, 15 கிராமுக்கு மேல் ஹெராயின் அளவு கடத்தப்பட்டதால் மரண தண்டனை விதிக்கப்படும்.

கிஷோரிடமிருந்து பையைப் பெற்ற 61 வயதான சிங்கப்பூர் ஆடவர் புங் ஆ கியாங் என்பவருக்கு, கடத்தல் நோக்கத்திற்காக போதைப்பொருளை வைத்திருந்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜூலை 29, 2016 அன்று கிஷோர், போதைப்பொருள் மூட்டைகள் அடங்கிய பையை சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து, பாயா லெபார் காண்டோமினியம் அருகே கியாங்கிடம் வழங்கியுள்ளார்.

தவறுதலாக போடப்பட்ட 4வது டோஸ் தடுப்பூசி…பெண்ணின் மரணம் குறித்து தீவீர விசாரணை மேற்கொள்ளும் MOH