‘ஆசாத் ஹிந்த்’ அரசு உருவான தினம்- இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் மரியாதை!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

‘ஆசாத் ஹிந்த்’ (Azad Hind) அரசு உருவான தினமான கடந்த அக்டோபர் 21- ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1943- ஆம் ஆண்டு அக்டோபர் 21- ஆம் தேதி அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘ஆசாத் ஹிந்த்’ சுதந்திர அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இந்த அரசு சிங்கப்பூரில் இருந்து செயல்படத் தொடங்கியது. மேலும், சிங்கப்பூரில் இருந்தபடியே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தையும் தொடங்கினார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட இரண்டு நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.

தங்குவிடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு 5000 படுக்கைகள் ஒதுக்கீடு!

அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் வலுப்படுத்தினார். தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் புதிய சின்னம், தேசிய கொடி, புதிய நாணயங்கள் வெளியிடப்பட்டன. அத்துடன் அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்து பிறகு மியான்மர் நாட்டின் ரங்கூனுக்கு மாற்றப்பட்டது.

நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் சுதந்திரமான தற்காலிக அரசாங்கமான ‘ஆசாத் ஹிந்த்’ அரசாங்கத்தின் நினைவாக, இந்த நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியாவுக்கான தூதர்கள் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றன. அந்த வகையில், ‘ஆசாத் ஹிந்த்’ அரசின் 78- வது ஆண்டு நிறைவையொட்டி, கடந்த அக்டோபர் 21- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள, இந்திய தேசிய ராணுவத்தின் நினைவு சின்னத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

‘ஆசாத் ஹிந்த்’ அரசாங்கம் நாடு கடந்த இந்திய அரசு என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.