இந்திய கைத்தறி குறித்த சிறப்பு பேஷன் ஷோ, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள இந்திய தூதரகம்!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India in Singapore), இந்திய கைத்தறி குறித்த சிறப்பு பேஷன் ஷோ (l Fashion show) மற்றும் கண்காட்சிக்கு (Exhibition) ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி, பூங்கோல்லில் உள்ள குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் ஸ்கூல் (Global Indian International School)- ஜிஐஐஎஸ் ஸ்மார்ட் வளாகத்தில் (GIIS SMART Campus) வரும் அக்டோபர் 15- ஆம் தேதி அன்று மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை நடைபெறவுள்ளது.

கோவிட்-19 வழக்குகள் அதிகரிப்பால் மருத்துவமனைகளில் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் நேரம் குறைப்பு : சுகாதார அமைச்சகம் !

இந்த கண்காட்சியில், இந்திய கைத்தறியில் தயாரான அனைத்து வகையான ஆடைகளும் இடம் பெறவுள்ளனர். எனவே, பேஷன் ஷோ மற்றும் கண்காட்சியைக் காண விரும்புவோர், வரும் அக்டோபர் 14- ஆம் தேதி அன்று மதியம் 12.00 மணிக்கு 𝐡𝐜𝐨𝐟𝐟.𝐬𝐢𝐧𝐠𝐚𝐩𝐨𝐫𝐞@𝐦𝐞𝐚.𝐠𝐨𝐯.𝐢𝐧 என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி, இருக்கையைப் பதிவு செய்துக் கொள்ளலாம். குறைந்த இருக்கைகளே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் புகைத்ததற்கு S$500 அபராதம் – தன் சம்பளத்தில் பாதி என புலம்பெயர் தொழிலாளி கண்ணீர் !

இது குறித்து மேலும், விவரங்களுக்கு இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.