இந்திய தூதரகம், ItsRainingRaincoats இணைந்து இந்திய தொழிலாளர்களுக்கு டி சர்ட்டுகள் மற்றும் மெடிமிக்ஸ் ஆயுர்வேத கிட்டுகள் விநியோகம்!

Photo: High Commission Of India In Singapore Official Facebook Page

எட்டாவது சர்வதேச யோகா தினம் (International Yoga Day 2022), கடந்த ஜூன் 21- ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்திய அரசு சார்பில், யோகா கலையை அனைத்து தரப்பினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அதேபோல், சர்வதேச யோகா தினம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய தூதரகம் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் சிறிது நேரம் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் தங்கி பணிப்புரிந்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு ‘Yoga For Humanity’ என்ற வாசகத்துடன் கூடிய டி சர்ட்கள் ( T shirts) மற்றும் மெடிமிக்ஸ் ஆயுர்வேத கிட்டுகளை (Medimix Ayurveda kits) இந்திய தூதரகம் (High Commission of India in Singapore) மற்றும் ItsRainingRaincoats ஆகியவை இணைந்து விநியோகம் செய்தனர். இதனை இந்திய தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

பிளவுப்படுமா சிங்கப்பூர்? – “முன்னேறும் சிங்கப்பூர் ” திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ஒவ்வொரு வரும் உடல் ஆரோக்கியத்துடனும், நோய் நொடியின்றி வாழ்வதற்கு இன்றைய காலகட்டத்தில் யோகா கலை இன்றியமையாததாகியுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் நாள்தோறும் யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.