தமிழக அமைச்சருடன் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் சந்திப்பு!

Photo: Tamilnadu Health Minister Official Twitter Page

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அவருடன் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்குமார் இ.ஆ.ப., ஆகியோரும் இங்கு வந்துள்ளனர்.

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர் ! – நாட்டை விட்டு தப்பிக்க முயற்சியா? படகு மூழ்கியதா?

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் மெரினா பேவில் (Marina Bay) நவம்பர் 7- ஆம் தேதி அன்று காலை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடங்கி வைத்த 7-வது உலக சுகாதார மாநாட்டில் (7th World one health congress) கலந்துக் கொண்டார். நவம்பர் 11- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த தலைச் சிறந்த மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பு உரையாற்றவுள்ளனர்.

அந்த வகையில், இன்று (08/11/2022) காலை உலக சுகாதார மாநாட்டில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றினார். பின்னர், அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் பெ.குமரன் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின் போது, இந்திய தூதரக அதிகாரிகள், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உச்சத்தை எட்டும் கார்பன் உமிழ்வு! – சிங்கப்பூரில் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த இதுதான் வழியா?

முன்னதாக, நவம்பர் 7- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் மிகப்பெரிய மருத்துவமனையான சிங்கப்பூர் பொது மருத்துவமனையை (Singapore General Hospital) நேரில் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.