சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக பொறுப்பேற்ற திரு. பெரியசாமி குமாரன் – அதிபரை சந்தித்தார்..!

High Commissioner P.Kumaran presented his credentials to President Halimah Yacob
High Commissioner P.Kumaran presented his credentials to President Halimah Yacob (Photo: India in Singapore/ Twitter)

சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியாக திரு. ஸ்ரீ பெரியசாமி குமாரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியான ஸ்ரீ பெரியசாமி குமாரன், தனது சான்றுகளை அதிபர் ஹலிமா யாகோபிடம் நேற்று (ஆகஸ்ட் 25) ஒப்படைத்தார். இதனை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சென்னை விமான நிலையத்தை புறக்கணிக்கும் தமிழக பயணிகள்…!

திரு. குமரன் அவர்கள் 1992ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவு சேவையில் தன்னை இணைத்தார். அதனை தொடர்ந்து, 1993ஆம் ஆண்டில் இருந்து 1997ஆம் ஆண்டு ஜூன் வரை எகிப்த்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலை அதிகாரியாக பணியாற்றினார்.

அதன் பின்னர், 1997ஆம் ஆண்டு ஜூலை முதல் 2000 டிசம்பர் வரை லிபியத் தலைநகர் டிரிபோலியில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை அதிகாரியாக பணியாற்றினார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் துணை செயலாளராக பதவி வகித்தார், பின்னர் பல முக்கிய பதவிகளில் சேவை ஆற்றியுள்ளார்.

பின்னர் 2011-2014 ஆண்டுகளில் இலங்கை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை தூதரக பணியாற்றினார். இறுதியாக இந்த கடந்த ஜூலை வரை கத்தார் நாட்டில் இந்திய தூதராக ஸ்ரீ பெரியசாமி குமாரன் பணியாற்றினார்.

இதற்கு முன்னதாக சிங்கப்பூருக்கான இந்திய தூதராக உயர் அதிகாரியாக ஜாவேத் அஷ்ரப் பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg