சிங்கப்பூரில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டினரின் கவனத்திற்கு…!

Photo: Housing and Development Board

சிங்கப்பூரில் குடியிருப்புகள் மற்றும் நிலங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டினர் குடியிருப்புகள் மற்றும் நிலங்களை அதிகம் வாங்க ஆர்வம் காட்டுவதே என்று கூறப்படுகிறது.

‘குறைந்த கட்டணத்தில் திருச்சியில் இருந்து சிட்னிக்கு விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு!

இந்த நிலையில், சிங்கப்பூரில் வெளிநாட்டினர் குடியிருப்பு உள்ளிட்ட சொத்துகளை வாங்குவதற்கு செக் வைக்கும் வகையில் முத்திரைத்தாள் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது சிங்கப்பூர் அரசு. இதன் மூலம், குடியிருப்புகள் மற்றும் நிலங்களை வெளிநாட்டினர் வாங்குவது குறையும். அதேபோல், சிங்கப்பூரில் பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளின் விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்திரைத்தாள் கட்டண உயர்வானது ஏப்ரல் 27- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சிங்கப்பூர் குடிமக்கள் தங்களின் முதல் வீட்டை வாங்கும் போது, எந்த விதமான முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனினும், இரண்டாவது வீட்டை வாங்கும் போது, முத்திரைத்தாள் கட்டணமாக சுமார் 20% செலுத்த வேண்டும். அதேபோல், மூன்றாவது வீட்டை வாங்கும் போது முத்திரைத்தாள் கட்டணமாக 30% செலுத்த வேண்டும்.

சிங்கப்பூரர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள் எவை?- கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல்!

சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் முதல் வீட்டை வாங்கினால் 5% முத்திரைத்தாள் கட்டணமும், இரண்டாவது வீட்டை வாங்கினால் 30% முத்திரைத்தாள் கட்டணமும், மூன்றாவது வீட்டை வாங்கினால் 35% முத்திரைத்தாள் கட்டணமும் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டினர் வாங்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 60% முத்திரைத்தாள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.