ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா!

Photo: Sri Vairavimada Kaliamman Temple Official Website

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் மிகவும் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple). இக்கோயில் 2001 தோவா பயோஹ் லோரோங் 8- ல் (2001 Toa Payoh Lorong 8) அமைந்துள்ளது. நாள்தோறும் 100- க்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். விஷேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

கட்டாய விடுப்பு, 24 மணிநேர உதவி தொலைபேசிச் சேவை… சிங்கப்பூர் பணியாளர்களின் நலக்காக வெளியாகப்போகும் அசத்தல் அறிவிப்பு!

இந்த நிலையில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் (Hindu Endowments Board) அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஸ்ரீ வைராவிமட கோயிலில் ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா வரும் மே 24- ஆம் தேதி முதல் மே 28- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில், அபிஷேகப் பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.

வரும் மே 28- ஆம் தேதி அன்று காலை 09.30 மணி முதல், மஞ்சள் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் மஞ்சள் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.

டிக்கெட் விலை ரொம்ப கம்மி! சிங்கப்பூருக்கு விமான சேவையை அறிவித்துள்ள நிறுவனம்!

இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.