சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுத்து, தலா S$500 கமிஷனுக்கு மலேசியா அனுப்பிவைத்த ஏஜென்சி பெண்

வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை (employment agency license) பயன்படுத்திய காளீஸ்வரி
illustration purposes via & Wikipedia

சிங்கப்பூருக்கு ஏழு வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களை சட்டவிரோத முறையில் வரவழைத்து அவர்களை மலேசியாவுக்கு அனுப்பியதாக சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணிப்பெண்ணுக்கும் கமிஷன் தொகையாக சுமார் S$500 வெள்ளியை அவர் பெற்றுக்கொண்டு அந்நாட்டுக்கு அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை.. “திருமணமான ஊழியர்களுக்கு” மட்டுமே அனுமதி என வைக்கப்பட்ட போஸ்டர்

பின்னர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் கூறியதாவது; மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே அவரது விருப்பம் என்றும், இதற்காக சில நூறு வெள்ளியை மட்டுமே பெற்றதாகவும் கூறியுள்ளார்.

ஜி.காளீஸ்வரி என்ற அந்த பெண், வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக உதவி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இறுதியாக அவருக்கு ஆறு மாதங்கள், ஆறு வார சிறைத்தண்டனை மற்றும் S$25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்காக அவர் வைத்திருந்த வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை (employment agency license) பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க சட்டவிரோதமாக உதவுவதோடு மட்டுமல்லாமல், மலேசியாவிற்கு அவர்களை அனுப்ப ஆயிஷா என்ற பெண்ணுக்கும் காளீஸ்வரி உதவியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்ய, அவர் தனது முன்னாள் சக ஊழியரின் சிங்பாஸ் கணக்கை முன்பு பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​”தான் செய்வது சட்டவிரோதமான செயல் என்பது தனக்குத் தெரியும், ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்யவே அவ்வாறு செய்ய நினைத்தேன்” என்றும் காளீஸ்வரி கூறியுள்ளார்.

தண்டனையை எதிர்த்து காளீஸ்வரி மேல்முறையீடு செய்துள்ளார்.

மெரினா பே பகுதியில் புத்தாண்டு கொண்டாட செல்வோரின் கவனத்திற்கு..