மெரினா பே பகுதியில் புத்தாண்டு கொண்டாட செல்வோரின் கவனத்திற்கு..

marina-bay-countdown 2024

சிங்கப்பூரில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல், 2024 ஜனவரி 1 அதிகாலை வரை மெரினா பேயில் புத்தாண்டு தின கவுண்ட்டவுன் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

தனக்கே பல தேவைகள் இருந்தும்.. 250 நாய், பூனைகளை பராமரித்து காக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

அப்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாலை மூடல்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

மெரினா பே பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெரினா பே பகுதியை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் கூட்டத்தை சரிசெய்ய காவல்துறை அதிகாரிகள், துணை போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழையும் பொதுமக்களின் எண்ணிக்கையை போலீசார் ஒழுங்குபடுத்துவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

இதில் The Promontory, ஒன் ஃபுல்லர்டன், மெர்லியன் பார்க், எஸ்பிளனேட் பார்க், Esplanade Waterfront Promenade மற்றும் Marina Bay Sands Waterfront Promenade ஆகிய இடங்களும் அடங்கும்.

பொதுமக்களின் வருகை குறிப்பிட்ட வரம்புகளை அடைந்தவுடன் இந்தப் பகுதிகளுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

மரினா பே பகுதியைச் சுற்றியுள்ள MRT நிலையங்களில் சில நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்படும்.

மேலும் கூட்ட நெரிசலான பகுதிகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப, கூட்ட நெரிசலான நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் கடந்து செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிட்டி ஹால், ராஃபிள்ஸ் பிளேஸ் மற்றும் பேஃபிரண்ட் MRT நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் Esplanade, Promenade, Downtown மற்றும் மெரினா பே போன்ற அருகிலுள்ள மற்ற ரயில் நிலையங்களைப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

2024 தொடக்கத்திலேயே கோடீஸ்வரனாகும் வாய்ப்பு.. சிங்கப்பூர் TOTO லாட்டரி அசத்தல் அறிவிப்பு

சிங்கப்பூரில் 2024 புத்தாண்டு வாணவேடிக்கை நடக்கும் 14 இடங்கள்:

சிங்கப்பூரில் “2024 புத்தாண்டு வாணவேடிக்கை” – 14 இடங்களில் கொண்டாட்டம்.. முழுத் தொகுப்பு