தனக்கே பல தேவைகள் இருந்தும்.. 250 நாய், பூனைகளை பராமரித்து காக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

migrant-workers stray dogs-cats bonds
ItsRainingRaincoats/Facebook

சிங்கப்பூரில் தொழிற்சாலை பகுதி ஒன்றில் வசிக்கும் சுமார் 250 நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவளித்து பாதுகாக்கும் ஓர் உன்னத பணியை வெளிநாட்டு ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் வாரத்தின் ஆறு நாட்கள் விலங்குகளுக்கு உணவளித்து அவைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து வருகின்றனர்.

2024 தொடக்கத்திலேயே கோடீஸ்வரனாகும் வாய்ப்பு.. சிங்கப்பூர் TOTO லாட்டரி அசத்தல் அறிவிப்பு

மீதமுள்ள ஒரு நாள், அதாவது ஒவ்வொரு சனிக்கிழமை இரவும், சிங்கப்பூரின் The Straits Affairs வனவிலங்கு பாதுகாப்பு குழு அவைகளுக்கு உணவுகளை வழங்கி பராமரிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அது எந்த இடத்தில் உள்ள தொழிற்சாலை என்ற எந்த தகவலும் அதில் குறிப்பிடப்படவில்லை.

இந்த தொழிற்சாலையில் சுமார் 150 நாய்கள் மற்றும் 100 பூனைகள் உள்ளன. அவைகள் தொழிற்சாலைகளிலும் அங்குள்ள கனரக இயந்திரங்களுக்கும் மத்தியில், ஊழியர்களுடன் சகஜமாகத் திரியும் என கூறப்பட்டுள்ளது.

அங்குள்ள 30 முதல் 40 வெளிநாட்டு ஊழியர்கள் அந்த விலங்குகளுக்கு உணவளித்து பராமரிக்கின்றனர்.

உணவை மட்டுமல்ல, அவைகளுக்கு தேவையான மருந்துகளையும் அவர்கள் வழங்குகிறார்கள்.

மேலும் ஏதேனும் காயங்கள், நோய்கள் மற்றும் ஏதேனும் காணாமல் போனால் கூட அவற்றை கவனத்தில் எடுத்து கொள்கின்றனர்.

The Straits Affairs-ஸின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான ரமேஷ், தங்கும் விடுதி மேலாளர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர். சுமார் 50 வயது நிரம்பிய அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் இருக்கிறார்.

இவரும் மிக அன்பான முறையில் பூனைகளை பராமரித்து வருவதாகவும், அவற்றைப் பற்றி பேசும்போது அவரது கண்களில் ஒரு வித மகிழ்ச்சி பொங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

பிற உயிரினங்கள் மீது அன்பு காட்டுவதில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிகர் அவர்கள் மட்டும் தான்.

லிட்டில் இந்தியாவில் அதிரடி சோதனை: 14 ஆண்கள் கைது – ஆணுறைகள் பறிமுதல்