“ப்ளூ வெரிஃபைடின் மறுவெளியீடு நிறுத்தி வைப்பு”- எலான் மஸ்க் அறிவிப்பு!

File Photo

ட்விட்டரில் போலியான நபர்கள் இல்லை என்ற நம்பிக்கை வரும் வரை ப்ளூ வெரிஃபைடின் (Blue Verified) மறுவெளியீடு நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரானிய அணி! – என்ன நடந்தது?

எட்டு டாலர் செலுத்தும் யார் வேண்டுமானாலும், வெரிஃபைட் கணக்கு எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு அளிக்கப்படும், ப்ளூ டிக்கை அவர்களது கணக்கிற்கு பெற முடியும் என்ற திட்டத்தை, தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்தது. நவம்பர் 29- ஆம் தேதி முதல் ப்ளூ டிக் பெறும் திட்டம் மறுவெளியீடு செய்யப்படும்; இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற முத்திரையைப் பெற முடியும் என்பதால், பல போலி நபர்கள் உண்மையான பிரபலங்களின் பெயரிலும், நிறுவனங்களின் பெயரிலும் கணக்குகளைத் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளாக உருவாக்கி வருகின்றனர்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “போலி நபர்கள் இல்லை என்ற நிலை வரும் வரை, ப்ளூ வெரிஃபைடின் மறுவெளியீட்டை நிறுத்தி வைக்கிறோம். மேலும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தனித்தனியாக வெவ்வேறு நிறத்தில் டிக் வழங்குவது பற்றி ஆலோசனை செய்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.