புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயிலில் ‘கந்தசஷ்டி திருவிழா’ கோலாகலம்!

புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயிலில் 'கந்தசஷ்டி திருவிழா' கோலாகலம்!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

 

சிங்கப்பூரின் ஈசூன் இண்டஸ்ட்ரியல் பார்க்கில் (10 Yishun Industrial Park A) அமைந்துள்ளது புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயில் (Holy Tree Sri Balasubramaniar Temple). இந்த கோயிலில், ‘கந்தசஷ்டி திருவிழா’ கடந்த நவம்பர் 13- ஆம் தேதி அன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், வரும் நவம்பர் 19- ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்

நாள்தோறும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சுமார் 300- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட ‘கந்தசஷ்டி பாராயணம்’ நிகழ்வும் நடைபெற்றது.

புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயிலில் 'கந்தசஷ்டி திருவிழா' கோலாகலம்!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

‘கந்தசஷ்டி திருவிழா’வின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 18- ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இரவு 07.00 மணிக்கு கந்தசஷ்டி கவசம் பாராயணமும், இரவு 07.30 மணிக்கு வீரப்பக்தர்களுக்கு மாலை அணிவித்தல் மற்றும் வாள்வழங்குதலும், இரவு 07.40 மணிக்கு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் புறப்பாடும், இரவு 07.45 மணிக்கு யாகசாலை பூர்ணாஹூதி தீபாராதனையும், இரவு 07.50 மணிக்கு சூரசம்ஹாரமும், இரவு 08.45 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், இரவு 09.05 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும், இரவு 09.30 மணிக்கு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மயில் வாகனத்தில் புறப்ப்பாடும் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட 7 இடங்களுக்கு ERP கட்டணங்கள் இல்லை – குறிப்பிட்ட கால நேரத்தில் இலவசமாக பயணிக்கலாம்

நவம்பர் 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணிக்கு சிறப்பு ஹோமமும், காலை 09.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 09.45 மணிக்கு உபயதாரர் சங்கல்பமும், காலை 10.00 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், காலை 10.30 மணிக்கு சண்முக அர்ச்சனையும், காலை 11.45 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12.00 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், இரவு 08.00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 08.30 மணிக்கு ஸ்ரீ முருகர், ஸ்ரீ தெய்வானை மற்றும் ஸ்ரீ வள்ளி புறப்பாடும், இரவு 08.45 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயிலில் 'கந்தசஷ்டி திருவிழா' கோலாகலம்!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், விரிவான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.