புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த சூரசம்ஹாரம்!

புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த சூரசம்ஹாரம்!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

சிங்கப்பூரில் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் (Holy Tree Sri Balasubramaniar Temple) கந்தசஷ்டி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி பெருவிழாவின் ஆறாவது நாளான நேற்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு சூரசம்ஹாரம் விழா (Surasamharam Festival- 2023) வெகு விமர்சையாக நடைபெற்றது.

புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த சூரசம்ஹாரம்!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

சோதனையில் சிக்கிய 3 ஆடவர்கள் – தப்பிக்க முயன்றவரை வளைத்து பிடித்து அதிகாரிகள்

அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கம்பீரமாக சக்திவேலுடன் வந்த முருகன், சூரனனின் தலையைக் கொய்து வதம் செய்தார். மேலும், முருகன் வேடமணிந்து கையில் வேலுடன் வந்த பக்தர்கள், சூரனை வதம் செய்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அதேபோல், சூரன் போன்று பக்தர்கள் வேடமணிந்து சூரனை சுமந்து வந்தது காணக்கிடைத்தாகக் காட்சியாக அமைந்தது.

புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த சூரசம்ஹாரம்!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

இந்த சூரம்ஹார விழாவைக் காண சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மது அருந்துவோருக்கு வந்தது புதிய திருத்த சட்டம்: 2024 ஜனவரி 2 முதல்… மீறினால் நடவடிக்கை

முன்னதாக, 300- க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட ‘கந்தசஷ்டி பாராயணம்’ நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by MonsterInsights