புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் கோலாகலமாக நடந்த முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்!

புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் கோலாகலமாக நடந்த முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

 

சிங்கப்பூரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் (Holy Tree Sri Balasubramaniar Temple). இந்த கோயிலில் கடந்த நவம்பர் 13- ஆம் தேதி அன்று கந்தசஷ்டி விழா தொடங்கிய நிலையில், நவம்பர் 18- ஆம் தேதி சூரனை முருகன் தனது சக்திவேலைக் கொண்டு வதம் செய்யும், மஹா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் கோலாகலமாக நடந்த முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்!

முதலாளியிடம் இருந்து தங்க, வைர நகைகள் & ரோல்ஸ் வாட்சை திருடிய வெளிநாட்டு பணிப்பெண்

அதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகளுடன் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் முழங்க, முருகன், வெள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர், முருகன் வள்ளி, தெய்வானையுடன் கோயில் வளாகத்தில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடந்த முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்!

இந்த திருக்கல்யாணத்தில் 500- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது.