சிங்கப்பூரில் வேலையை இழந்து வீதிகளில் படுத்து உறங்கும் ஊழியர்கள்! – வாடகை செலுத்தமுடியாமல் இருப்பிடத்தை இழந்து நிற்கும் அவலம்

homeless labour singapore jobless covid
கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுப் பரவலின் போது வசிப்பிடம் இன்றி வீதிகளில் தங்குவோர் எண்ணிக்கை மற்ற நாடுகளில் சற்று அதிகரித்த நிலையில்,சிங்கப்பூரில் அவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு கணிசமாகக் குறைந்தது.ஆனால்,இருப்பிடம் இல்லாமல் தற்காலிக இருப்பிடங்களில் பலர் தங்கியதால் பொது இடங்களில் படுத்துறங்குவதைப் பார்க்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இருப்பிடம் இல்லாதோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆயிரத்தைத் தாண்டியது.2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏழு சதவீதம் இது குறைவாகும்.

சிங்கப்பூரில் வசிக்க இருப்பிடமின்றி தவிப்போரின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்க முதல்முறையாக 2019-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.2020-இல் இரண்டாவது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீதிகளில் படுத்து உறங்குபவர்களின் எண்ணிக்கை 41% சரிந்தது.