ஹாங்காங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம்!

Spore Airlines bring back hot towels
Photo: Mothership

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான SQ7858 என்ற சரக்கு விமானம், சனிக்கிழமை இரவு 07.39 மணிக்கு சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு புறப்பட்டது. எனினும், விமானத்தில் தீ ஏற்பட்டதற்கான எச்சரிக்கை ஒலி எழுந்ததால், விமானத்தை ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக, விமான நிலையத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஸ்ரீ சத சண்டி மஹா யாகம்!

அதைத் தொடர்ந்து, விமானத்தைத் தரையிறக்க கிடைத்த அனுமதியை அடுத்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானத்தை உள்ளூர் நேரப்படி இரவு 10.50 மணிக்கு பாதுகாப்பாக விமானிகள் தரையிறக்கினர். பின்னர் விமானம் முழுவதையும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். இருப்பினும், விமானத்தில் தீ (அல்லது) புகை ஏற்படாதது உறுதிச் செய்யப்பட்டது.

ஹாங்காங் விமான நிலைய ஆணையம் (Hong Kong Airport Authority) கூறியதாவது, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் தரையிறங்குவதற்காக, விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை தற்காலிகமாக சுமார் 54 நிமிடங்கள் வரை மூடப்பட்டது. இதன் காரணமாக, அந்த ஓடுபாதையில் தரையிறங்க வேண்டிய, சுமார் 9 விமானங்கள் மாற்று ஓடுபாதையில் திருப்பி விடப்பட்டது. எனினும், இரவு 11.06 மணிக்கு இந்த ஓடுபாதையில் மீண்டும் விமான சேவை தொடங்கியது” எனத் தெரிவித்துள்ளது.

பிரபல ஐ.டி. நிறுவனம் அறிவித்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கை… ஊழியர்கள் கடும் அதிர்ச்சி!

இதனிடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம், பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு சிறிது நேரம் தாமதமாக ஷாங்காய் நகருக்கு சென்றடைந்தது.